முகப்பரு அல்லது பிம்பிள்ஸ் பிரச்சினையா? கவலைப்படாதீர்கள் ...இதைப் படியுங்கள் பயன் பெறுவீர்!

முகப்பருவுக்கு
நிவாரணம்   பாகம்-1

1.முதலில் முகத்தில் இருக்கின்ற செபாஷியஸ்
சுரப்பிகளில்
இருந்து சுரக்கும் "சீபம்" என்னும்
எண்ணெய்க் கசிவு முகத்தோலின் மீது படிவதால்,
பலவிதமான ரசாயன மாற்றங்களுக்கு உட்பட்டு அவை
முகப்பருவாக மாறுகிறது. நவநாகரீக உணவான ட்ரை
புட்ஸ்களை தவிர்க்க வேண்டும்.

2. முகப்பரு இருந்தால் உடனே கிள்ளி எறிந்து விட
விரல்கள் முயற்சிக்கும். கிள்ளினால் பெரும் விளைவுகள்
உண்டாகும். முதலில் புதினா
புதினா இலைகளை அரைத்து
தடவுங்கள்.

3. வேப்பிலை பொடியுடன் மஞ்சள் தூள், சந்தனம்
சேர்த்து நீர்விட்டு குழைத்து பருக்களில் மீது பூசி வரலாம்.

4. வேப்பிலை பொடி, புதினா பொடி, துளசிப் பொடி,
இவைகளை தலா 10 கிராம் அளவு எடுத்துக் கொண்டு மிதமான சுடுதண்ணீரில் மேற்கொண்ட பொடிகளை சந்தனம் போல் குழைத்து முகத்தில் தடவவும். கண்களுக்கு அடியில் கண்டிப்பாக தடவக் கூடாது. 15
நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவி விடவும். தொடர்ந்து 4 அல்லது 5 நாட்கள்  செய்தால் பருக்கள் மறையும்.

5. அருகம்புல் பொடி, குப்பை மேனி
இரண்டையும் சம அளவு பருக்களின் மேல் மருந்து
போல் இரவில் போட்டு, காலை அலம்புங்கள். தொடர்ந்து
2. 3 நாட்கள் செய்தால் பரு மறையும்.

6.முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு முன்காலத்தில் புற்றுமண்  பூசும் வழக்கம் இருக்கிறது. தற்போது பவுடர் பூசுவதால் சருமங்களில் தங்கி தேவையற்ற அழுக்குகளை கொடுக்கிறது. எனவே முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தம் செய்வது அவசியம்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். படித்ததற்கு நன்றி!  பல நிவாரண குறிப்புகளோடு மீண்டும் உங்களுக்கு பதிவிடுகிறேன்.நன்றி!


Comments

Popular posts from this blog

வாய்ப்புண் பிரச்சினையா? கண்டிப்பாக இதை படிக்கவும்... பாகம் 2

Tips to wake up early in the morning

தலைவலி-ஜலதோஷம் (சளி) கபம் குறைய சில நிவாரணங்கள் பாகம் 2