Posts

தலைவலி-ஜலதோஷம் (சளி) கபம் குறைய சில நிவாரணங்கள் பாகம் 2

Image
நிவாரணம் பாகம்-2 6.திப்பிலி ஒரு பங்கு மற்றும் துளசி இலை மூன்று பங்கு என்ற அளவில் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட சளி அகலும். 7. தும்பை பூ உடன் மிளகு சேர்த்து தூளாக்கி காலை மாலை எனில் நாட்கள் சாப்பிட சளி அகலும். 8. சூடான சுக்கு மல்லி காபியில் சிறிது தேன் கலந்து குடிக்க சளி கரையும். 9. இஞ்சிச்சாறு 50 கிராம், நல்லெண்ணெய் 50 கிராம் எடுத்துக்கொண்டு சேர்த்து காய்ச்சி டப்பாவில் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.இந்தத் தைலத்தை நன்றாக தேய்த்து வெந்நீரில் குளித்தால்  தலைவலி குணமாகும். 10.முள்ளங்கி சாறு அல்லது மாதுளை பழம் சாப்பிட தலைவலி மற்றும் ஜலதோஷம் நீங்கும்.

தலைவலி-ஜலதோஷம், கபம் கரைய....... சில வழிமுறைகள்.

Image
நிவாரணம் பாகம்-1. 1. செலவின்றி தினமும் காலையில் வெறும் வயிற்றுடன், பல் துலக்கிய உடன் வாயைச் சுத்தம் செய்யும்பது முதுகை நன்றாக வளைத்து, அவ்வாறு செய்யும்போது உணவுக்குழல் வழியாக உள்ளே விட்டு நீர் முதலில் வெளியேறும். இந்த பித்த நீர் வெளியேற்றும் பல நோய்கள் உருவாகுவதை தவிர்க்கவும். 2. நாட்டு வெங்காயம் 2, மூன்று மட்டும் பச்சையாகவே குறித்து சாப்பிட்டாலும் அல்லது கொண்டகடலை லேசாக வறுத்து மென்று சாப்பிட்டு வர தலைவலி, தலைபாரம், இருமல், தீரும். 3. பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டுவர மழை மற்றும் குளிர்காலங்களில் ஏற்படும் ஜலதோஷம், காய்ச்சல் மற்றும் தலைவலி தீரும். 4. துளசி இலையை அரைத்து விழுதை நெற்றியில் பற்றுப் போட தலைவலி குணமாகும். 5. துளசி இலை சாறு, வில்வ இலை சாறு வகைக்கு 100 மில்லி எடுத்து, அத்துடன் 200 மில்லி தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி, சாறு சுண்டிய பின் இறக்கி வடிகட்டி தினசரி தலைக்கு தேய்த்துவர அனைவரும் தலை வலி தொல்லை தீரும்.

பற்களை பாதுகாக்க சில வழிமுறைகள்...... பாகம் 2.

Image
நிவாரணம் பாகம்-2 6. வன்னிக் காயை தண்ணீரில் கொதிக்கவைத்து வெது, வெதுப்பாக இருக்கும் போது வாய் கொப்பளிக்க பல் ஈறுகள் வீக்கம் மற்றும் வலி நீங்கும். நாக்கு மற்றும் வாய்ப்புண் ஆறும். 7.வாகை வேர்ப்பட்டையை நீர் விட்டுக் காய்ச்சி வெது ,வெதுப்பாக இருக்கும் போது அதனைக் கொண்டு வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாகும் . பல் ஈறு உறுதியாகும். 8. பப்பாளிப் பழத்தை தொடர்ந்து 4, 5 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல் கூச்சம் நீங்கி விடும். சர்க்கரை சத்து சேர்ந்து விடும் என்று பயம் வேண்டாம். 9. வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும். மேற்கண்ட ஏதேனும் ஒரு வழிமுறையை பயன்படுத்தி பயன் பெறுவீர். நன்றி.

பற்களை பாதுகாக்க சில எளிய வழிமுறைகள்.

Image
நிவாரணம் பாகம் 1 1. இனிப்பு அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு பல் சொத்தை ஏற்படும். எனவே எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளித்து பற்களை சுத்தம் செய்ய வேண்டும். 2. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பதும், குளிர்ந்த நீரை குடிப்பது கூடாது. 3.பப்பாளி செடியின் பாலை அல்லது எருக்கம் பாலை தொட்டு வலியுள்ள பல் மீது தடவி வர பல்வலி தீரும். 4. ஆலம் மொட்டை அல்லது பாகற்காய் இலையில் அல்லது நந்தியாவட்டை வேரை எடுத்து வந்து அடிக்கடி பல்லினால் நன்றாக மென்று அடக்கி வைத்து பிறகு துப்பி விட பல் வலி நீங்கும். 5. அத்தி மரத்தின் இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வெது, வெதுப்பாக இருக்கும் போது வாய் கொப்பளிக்க வாய்ப்புண், பல் ஈறுகளில் சீழ் பிடித்தல் போன்ற நோய்கள் குணமாகும்.

வாய்ப்புண் பிரச்சினையா? கண்டிப்பாக இதை படிக்கவும்... பாகம் 2

Image
வாய்ப்புண்ணிற்கு நிவாரணம் பாகம் 2 5. ஆலம் விழுதில் உள்ள முளைகளை கடித்து மென்று சாப்பிட வாய்ப்புண் ஆறும். 6. முல்லைப்பூ இலையை வாயிலிட்டு மென்று சாப்பிட வாய்ப்புண் குணமாகும். 7. பிஞ்சுக் கடுக்காயை வாயில் ஒதுக்கிக் கொண்டு சிறிது சிறிதாக உமிழ் நீரை விழுங்கி வர வாய்ப்புண் ஆறுவதுடன் மலச்சிக்கல் அகலும். 8. வன்னி காயை அல்லது அத்தி மர இலையை தண்ணீரில் கொதிக்கவைத்து அந்த தண்ணீரில் வாய் கொப்பளிக்க வாய்ப்புண், நாக்கு வீக்கம் மற்றும் வலி அகலும். மேற்கண்ட நிவாரண ங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி பயன் பெறுவீர், இன்னும் பல நலம் தரும் மருத்துவத்துடன் தங்களைச் சந்திக்கிறேன், நன்றி.

வாய்புண் பிரச்சினையா? கண்டிப்பாக இதை படியுங்கள் பயன் பெறுவீர்…!

Image
     வாய்ப்புண் நிவாரணம் பாகம் 1. 1.வேப்பிலையை காயப்போட்டு தூள் செய்து விட்டு தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் மாறும். 2. தேங்காய்ப் பாலில் மாசிக்காய் அரைத்து உட்கொண்டு வந்தால் வாய்ப்புண், தொண்டை புண் குணமாகும். 3. அகத்திக் கீரையை உண்டு வர வாய்ப் புண் வராது, ரத்தக் கொதிப்பு கட்டுப்படும். 4.அத்தி கொழுந்தை அதிகாலையில் ஒரு பிடி மென்று தின்றால் வாய்ப்புண் ஆறும். மேலே குறிப்பிட்ட நிவாரணங்கள் ஏதேனும் ஒன்றை பின்பற்றினால் பயன் பெறுவீர். மேலும் பல நிவாரணங்கள் உடன் தங்களைச் சந்திக்கிறேன். நன்றி

முகப்பருக்கள் மறைய வேண்டுமா? அப்ப கண்டிப்பாக நீங்கள் இதை பார்க்க வேண்டும்.

Image
முகப்பருவுக்கு நிவாரணம்   பாகம்-2 6.அருகம்புல் சாற்றுடன் சிறிதளவு பன்னீர் , பப்பாளி பழம் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி, உலகத்தடன் கழுவிவர வெயிலால் ஏற்பட்ட கருமை அகன்று முகம் பளபளப்பாகும் மேற் கூறிய  கலவை அரைத்து வடிகட்டி பருகி வர சிறுநீரக நோய்கள் குணமாவதுடன் ,உடலும் முகமும் அழகு பெறும். 7.ஊமத்தம் பூவை கசக்கி பருக்களின் மீது பற்றுப் போடலாம் .எலுமிச்சம் இலையை மட்டும் அரைத்து பூசலாம். 8.ஜாதிக்காய் ,சந்தனம் மிளகு இ,மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து முகத்தில் பூசினால் பரு தொல்லை போகும் சிலர் வெள்ளைப்பூண்டை மட்டும் அரைத்துப் பூசுவார்கள். 9.  தேன் மெழுகையும்,சர்க்கரையும் சேர்த்து குழைத்து அதை முகப்பருக்கள் மீது இட்டு வர விரைவில் அவை மறைந்துவிடும். முகம் பொலிவு பெறும் 10. வாரம் ஒன்றிரண்டு நாட்கள் அகத்திக் கீரையை உணவில் சேர்த்து வந்தாலும், தினசரி ஒரு துண்டு பப்பாளிப் பழம் சாப்பிட்டாலும் முகம் வசீகரன் அடைந்து, பருப்பில் நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். 11. துளசி 4 இலை, வேப்பம் தளிர், கடலை மாவு ஒரு தேக்கரண்டி, எலுமிச்சைச்சாறு அரை தேக்கரண்டி கலந்து அரைத்துக் கொள்ளுங்...