தலைவலி-ஜலதோஷம், கபம் கரைய....... சில வழிமுறைகள்.
நிவாரணம் பாகம்-1.
1. செலவின்றி தினமும் காலையில் வெறும் வயிற்றுடன், பல் துலக்கிய உடன் வாயைச் சுத்தம் செய்யும்பது முதுகை நன்றாக வளைத்து, அவ்வாறு செய்யும்போது உணவுக்குழல் வழியாக உள்ளே விட்டு நீர் முதலில் வெளியேறும். இந்த பித்த நீர் வெளியேற்றும் பல நோய்கள் உருவாகுவதை தவிர்க்கவும்.
2. நாட்டு வெங்காயம் 2, மூன்று மட்டும் பச்சையாகவே குறித்து சாப்பிட்டாலும் அல்லது கொண்டகடலை லேசாக வறுத்து மென்று சாப்பிட்டு வர தலைவலி, தலைபாரம், இருமல், தீரும்.
3. பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டுவர மழை மற்றும் குளிர்காலங்களில் ஏற்படும் ஜலதோஷம், காய்ச்சல் மற்றும் தலைவலி தீரும்.
4. துளசி இலையை அரைத்து விழுதை நெற்றியில் பற்றுப் போட தலைவலி குணமாகும்.
5. துளசி இலை சாறு, வில்வ இலை சாறு வகைக்கு 100 மில்லி எடுத்து, அத்துடன் 200 மில்லி தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி, சாறு சுண்டிய பின் இறக்கி வடிகட்டி தினசரி தலைக்கு தேய்த்துவர அனைவரும் தலை வலி தொல்லை தீரும்.

Comments
Post a Comment