பற்களை பாதுகாக்க சில எளிய வழிமுறைகள்.
நிவாரணம் பாகம் 1
1. இனிப்பு அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு பல் சொத்தை ஏற்படும். எனவே எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளித்து பற்களை சுத்தம் செய்ய வேண்டும்.
2. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பதும், குளிர்ந்த நீரை குடிப்பது கூடாது.
3.பப்பாளி செடியின் பாலை அல்லது எருக்கம் பாலை தொட்டு வலியுள்ள பல் மீது தடவி வர பல்வலி தீரும்.
4. ஆலம் மொட்டை அல்லது பாகற்காய் இலையில் அல்லது நந்தியாவட்டை வேரை எடுத்து வந்து அடிக்கடி பல்லினால் நன்றாக மென்று அடக்கி வைத்து பிறகு துப்பி விட பல் வலி நீங்கும்.
5. அத்தி மரத்தின் இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வெது, வெதுப்பாக இருக்கும் போது வாய் கொப்பளிக்க வாய்ப்புண், பல் ஈறுகளில் சீழ் பிடித்தல் போன்ற நோய்கள் குணமாகும்.

Comments
Post a Comment